கவிதைமணி

தண்ணீருக்கு இரத்தம்:  கவிஞர் இரா .இரவி

கவிதைமணி
இமயம் முதல் குமாரி வரை இந்தியா என்றும் இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர் என்றும் !இன்றும் நாம் பாடநூலில் குழந்தைகளுக்கு இனிமையாக கற்பித்து வருகிறோம் !பல நாடுகள் சண்டையின்றி அமைதியாக பாயும் நதியைப்  பங்குபோட்டு கொள்கின்றனர் !ஒரே நாட்டில் இரு மாநில பகிர்வில் சண்டை ஓயாத சண்டை தீர்ப்பை மதிக்காது சண்டை !மனிதநேயம் மனதில் இருந்தால் என்றும் மனிதன் ஒருவருக்கொருவர் சண்டையிட மாட்டான் !மனிதன் விலங்கில் இருந்து வந்தவன் என்பதற்காக மனிதன் மிருகமாக மாறுதல் முறையோ ?பொது சொத்துக்களை தனியார் சொத்துக்களைபொது இடத்தில எரித்து அழிப்பது முறையோ ?மனிதனுக்கு அழகு பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதன் சிந்திக்காமல் செயல்படுவது  முறையோ ?யாரும் யாரையும் தாக்குவது என்பது மடமை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நம் உடைமை !மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் மனிதனை அடிப்பது விடுத்து யோசிக்க வேண்டும் !விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லைகெட்டுப் போவோர் விட்டுக் கொடுப்பதில்லை !தண்ணீருக்கு இரத்தம் சிந்துவது முறையோ ?தனிமையில் யோசித்தால் கிடைக்கும்  விடை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT